News December 31, 2024
தமிழகத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை

வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் தருவாயில் இருக்கும் நிலையிலும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 14 செமீ மழை பதிவாகியிருக்கிறது. மேலும், நாலுமுக்கு – 13 செமீ, காக்காச்சி – 12 செமீ, மாஞ்சோலை – 10 செமீ என கனமழை பெய்திருக்கிறது. தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்கிறது.
Similar News
News August 14, 2025
ஆசிய கோப்பை: கில்லை ஓரங்கட்டும் கம்பீர்?

ஆசிய கோப்பைக்கான அணியில் கில்லை சேர்ப்பதில் கம்பீர் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20-களில் கில் கன்சிஸ்டன்சியுடன் விளையாடினாலும், பவர்பிளேயில் அதிரடியாக விளையாடாதது ஒரு விமர்சனமாக உள்ளது. ஆனால் சாம்சன், அபிஷேக் ஷர்மா 40 பந்துகள் ஆடினாலே ஆட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்பதால், கில்லுக்கு பதில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்க கம்பீர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
News August 14, 2025
பெண்கள் எப்போதும் வளைந்து கொடுக்க கூடாது: ஸ்வாசிகா

15 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் தனக்கு, இதுவரை பாலியல் தொந்தரவு இருந்ததில்லை என நடிகை ஸ்வாசிகா தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் இந்த பிரச்னை இருப்பதாகவும், பெண்கள் தைரியத்துடன் எந்த ஒரு இடத்திலும் வளைந்து செல்லக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஒருவர் தவறாக நடக்க முயன்றால் அவர்களை எதிர்கொள்ளவும், சமூகத்தின் முன் நிறுத்தவும் தயங்க கூடாது என்றும் கூறியுள்ளார்.
News August 14, 2025
செல்போன் ரீசார்ஜ் போதும்.. OTT சப்ஸ்கிரிப்ஷனே வேண்டாம்!

OTT சப்ஸ்கிரிப்ஷன் உடன் ஏர்டெல் பல ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது. ₹181 PACK: 30 நாள்களுக்கு 15GB டேட்டா, SonyLIV, Lionsgate Play, Hoichoi, Sun NXT உட்பட 22-க்கும் மேற்பட்ட OTT சந்தா கிடைக்கும். ₹271 PACK:ஒரு மாதத்திற்கு 1GB டேட்டா, Netflix Basic, Zee5 Premium, JioHotstar ஆகிய சேவைகளை பெறலாம். ₹399 PACK: 28 நாள்களுக்கு தினமும் 2.5GB டேட்டா, Jio Hotstar இலவசமாக பயன்படுத்தலாம். SHARE IT.