News December 31, 2024
கரூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது

கரூர் அருகே வேன் ஓட்டுநரான சிறுவன் பெரியகுளத்துப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் தாய் கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுவனை போலீசார் நேற்று முன்தினம் (டிச.29) இரவு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News August 22, 2025
கரூர்: மனைவி முன்பே கணவர் துடிதுடித்து பலி!

கரூர்: சின்னகோதுரைப் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(52). இவர் தனது மனைவி செல்வி(44), மகள் தனுசியா(14) ஆகியோருடன் காரில் கரூரை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது க.பரமத்தி அருகே பவுத்திரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பொன்னுசாமி பலியானார். அவரது மனைவி, மகள் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
News August 22, 2025
கரூர் : குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

கரூர் நங்கவரத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் அவரது உறவினரான முருகானந்ததிற்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்துள்ளது. இதில் கடந்த மாதம் 28ஆம் தேதி ராஜாவின் அப்பா செல்வராஜை முருகானந்தம் கத்தியால் குத்தியுள்ளார். நங்கவரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது மாவட்ட எஸ்பி பரிந்துரையில் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News August 21, 2025
கரூர்: உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை!

கரூர் மாவட்டத்தில் 27 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 26க்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு <