News December 31, 2024

ஓசூர் ஏரியில் கழிவுநீர் கலந்த லாரி ஓட்டுநர் கைது

image

ஒசூா் சிப்காட் போலீசார் பேகேப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் டேங்கர் லாரி ஒன்றில் இருந்து கழிவுநீர் ஏரியில் கலக்கப்பட்டது கண்ட போலீசார் அந்த லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் திருப்பத்தூர் மாவட்டம் காவேரியூரை சோ்ந்த திருநாவுக்கரசு என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனியார் நிறுவன கழிவுநீரை ஏரியில் கலந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News January 19, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன -18) இரவு 10 மணி முதல் இன்று காலை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 18, 2026

கிருஷ்ணகிரி: மரண பயத்தை போக்கும் காலபைரவர் கோயில்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுக்குறிக்கியில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். இங்கு மூலவராக காலபைரவர் இருக்கிறார். இங்கு 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. பலகணியில் உள்ள துளைகள் வழியாகவே இங்கு உள்ள லிங்கத்தைக் காண இயலும். ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை இராகுகாலத்தில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு வழிபடுவது மூலம் மரண பயம், கடன் ஆகியவை நீங்கும். ஷேர் பண்ணுங்க!

News January 18, 2026

கிருஷ்ணகிரி: 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

image

தளி அடுத்த சரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி பல்லவி (14), இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர் வயிற்றுவலி, தலைவலியால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று மாலை ஜன-17 வீட்டில் தனியாக இருந்த பல்லவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த தளி போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!