News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20-ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News April 13, 2025

புதுக்கோட்டையில் இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (13.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News April 13, 2025

வேண்டியதை அருளும் விராலிமலை முருகன்!

image

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தலங்களில் இந்த விராலிமலை முருகன் கோயிலும் ஒன்று. இங்குள்ள முருகனை மற்ற நாட்களில் வணங்குவதை விட தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

மீனம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் இளைஞர் பலி

image

புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை அருகே மீனம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் பொற்பனைகோட்டை சேர்ந்த மாரிமுத்து (23) இளைஞர் உயிரிழந்துள்ளார். 7 மேற்பட்டவர்கள் கந்தர்வகோட்டை அரசு மருந்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாரிமுத்துவின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!