News December 31, 2024

திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

image

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தலா 2 நகல்களாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பிப்ரவரி 10-க்குள் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

Similar News

News September 18, 2025

திருப்பூர்: ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

image

திருப்பூர் மக்களே, Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

News September 18, 2025

திருப்பூரில் மனைவியை கொன்ற கணவன் கைது

image

மேற்குவங்கத்தை சேர்ந்தவர் கவுரங்கா மண்டேல் (45), இவரது மனைவி ரிங்கு மண்டேல் (35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காங்கேயத்திற்கு கணவன் மனைவி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு அறையில் தூங்கி கொண்டிருந்த போது மனைவியை கவுரங்கா மண்டேல் கொலை செய்தார். பின் போலீசார் திருப்பூர் ரயில் நிலையத்தில் வைத்து கவுரங்கா மண்டேலை கைது செய்தனர்.

News September 18, 2025

திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், ஸ்டேசன் வீதி, வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோநகர், காமாட்சிபுரம், சாமுண்டிபுரம், கல்லம்பாளையம், பத்மாவதிபுரம், அண்ணாகாலனி, அங்கேரிபாளையம் ரோடு, கஞ்சம்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!