News December 31, 2024
கனிமொழி எம்பிக்கு மெழுகுவர்த்தி அனுப்பும் போராட்டம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டமாக மெழுகுவர்த்தியை திமுகவைச் சேர்ந்த கனிமொழி எம்பிக்கு அனுப்ப திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா மகளிரணியினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் தபால் அனுப்ப சென்ற மகளிர் அணி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தபால் நிலையம் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Similar News
News November 6, 2025
திருப்பூரில் இளைஞர் தற்கொலை

திருப்பூர், வேலம்பாளையம் தொகுதியை சேர்ந்தவர் சுபாஷ்(27). உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சுபாஷ் விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 6, 2025
திருப்பூரில் வாகனங்களை நிறுத்த திடீர் தடை

திருப்பூர் மாநகரின் வளர்மதி அருகே சுரங்க பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூர் சாய்பாபா காலனியில் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை நிறுத்த தடை செய்யப்பட்டு போலீசார் சார்பில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் போக்குவரத்து நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது
News November 5, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில், இன்று 05.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம், இப்பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் .அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.


