News December 31, 2024
புதுமைப்பெண் திட்டத்தில் 9,340 மாணவிகளுக்கு நிதி

தமிழ்நாடு முழுவதும் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, கிருஷ்ணகிரியிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தொடங்கி வைத்தார். மேலும், புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து 62 கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயிலும் 9,340 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
Similar News
News November 5, 2025
கிருஷ்ணகிரி: காவல்துறையின் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்ட உத்தனப்பள்ளி அருகே இன்று (நவ.05) லாலிக்கல் கிராமத்தில் உள்ள தனியார் மகளிர் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது வந்த புகாரின் பேரில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வளையதளங்களில் பரப்ப வேண்டாம், என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.
News November 5, 2025
கிருஷ்ணகிரி: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 5, 2025
கிருஷ்ணகிரி: டிரைவர் உட்பட இருவர் மாயம்

கிருஷ்ணகிரி, விவேக் கார்டன் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(26) டிரைவர். கடந்த 7 மாதங்களுக்கு முன், காவியா (22) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அக்.28ம் தேதி காலை வெளியே சென்ற வாசுதேவன் திரும்பி வரவில்லை. இதேபோல், கூலியம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (25) எலக்ட்ரீஷியன். 3மாதத்திற்கு முன் வேலை காரணமாக பெங்களூரு சென்றவர் திரும்பி வரவில்லை. இதனை அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


