News December 31, 2024
குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜன.8ம் தேதி தொடங்கவுள்ளன. எனவே இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரங்களை https://forms.gle/3FNSWCaHj9CKRqwW6 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
Similar News
News December 24, 2025
ஈரோடு: ரூ.50,000 சம்பளத்தில் TNPSC-இல் வேலை!

ஈரோடு மக்களே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளுக்கான, 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.20ம் தேதிக்குள் இந்த <
News December 24, 2025
ஈரோடு மக்களே: இன்று இங்கு கரண்ட் இருக்காது!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கெம்பநாய்க்கன்பாளையம், செல்லிபாளையம், கடம்பூர், ஏ.ஜி.புதுார், குன்றி, சின்னக்குளம், மாக்கம்பாளையம், அத்தியூர், தாசரிபாளையம், புங்கம்பள்ளி, விண்ணப்பள்ளி, தேசிபாளையம், சாணார்பதி, தொட்டிபாளையம், குரும்பபாளையம், ஆலாம்பாளையம், என்.மேட்டுப்பாளையம், குறிச்சி, பாப்பநாயக்கன்பாளையம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 24, 2025
JUST IN: ஈரோட்டில் பெரும் பரபரப்பு!

சத்தியமங்கலம் அருகே ராமபயலுரைச் சேர்ந்த சிரஜித்வருண், நிகாஸ்ரீ, அனீஸ் என 3 குழந்தைகளும் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஊமத்தங்காய் என்ற விஷகாயை தெரியாமல் தின்று விட்டார்கள். தகவல் அறிந்த ஊர் மக்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை பெற்று தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


