News December 31, 2024

புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடு

image

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டில் மது போதையில், வாகனம் ஓட்டினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும். அதிவேகமாக இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும். பொது இடங்களில் ஒலிபெருக்கிகளை வைத்து, மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. மீறி செயல்படுபவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

Similar News

News September 7, 2025

சேலம்: IMPORTANT இனி பட்டா மாற்றம் சுலபம்!

image

சேலத்தில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. https://tamilnilam.tn.gov.in/citizen/ வெப்சைட்டில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்ய வேண்டும். விரைவாக பட்டா ரெடியாகும். SHARE பண்ணுங்க!

News September 7, 2025

சேலம்: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

image

சேலம் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News September 7, 2025

சந்திர கிரகணம்- இன்று மாலை கோயில் நடைகள் அடைப்பு!

image

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று (செப்.07) மாலை 06.00 மணிக்கு சேலம் கடைவீதியில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் நடை சாத்தப்படுகிறது. அதேபோல், சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் நடை இரவு 07.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. இக்கோயில்களில் நாளை (செப்.08) சுத்தப்படுத்தி நடை மீண்டும் திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

error: Content is protected !!