News December 31, 2024
நடப்பாண்டில் EV வாகன விற்பனை உயர்வு

நடப்பாண்டில் மின்சார வாகன விற்பனை 26.50% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் 15 லட்சம் மின் வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பு ஆண்டில் 19.40 லட்சம் மின் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 12 வாகனங்களுக்கு ஒரு மின் வாகனம் என்ற ரீதியில் விற்பனை நடந்துள்ளது. எனினும், வாகன விற்பனையில் பெட்ரோல் வாகனங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதாவது, 1.91 கோடி பெட்ரோல் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Similar News
News March 8, 2026
இலவசம் என்பது வளர்ச்சியல்ல, அது வீழ்ச்சி: சீமான்

இதுவரை இருக்கின்ற அரசியல் கோட்பாடு, நிலைபாட்டில் முற்றிலுமாக தங்கள் கட்சியின் கோட்பாடு மாறுபட்டது என சீமான் பேசியுள்ளார். புதுச்சேரி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், அனைத்துக்கும் இலவசம் அறிவிக்கிறார்கள். இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல. அது வீழ்ச்சி திட்டம். கவர்ச்சி திட்டம் என்றார். இலவசம் பெற வேண்டிய வறுமை இன்றி மக்களை உயர்த்துவதே தமது கடமை எனவும் தெரிவித்தார்.
News March 8, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 626 ▶குறள்: அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர். ▶பொருள்: இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.
News March 8, 2026
ஜனாதிபதிக்கு நேர்ந்தது வெட்கக்கேடானது: PM மோடி

மேற்கு வங்கத்திற்கு சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்முவை அம்மாநில CM மம்தா பானர்ஜி நேரில் வரவேற்காததை வெட்கக்கேடானது என PM மோடி சாடியுள்ளார். பழங்குடியை சேர்ந்த முர்மு வெளிப்படுத்திய வலி மற்றும் வேதனை, இந்திய மக்களின் மனதில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது; TMC அரசு அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது என்றும், ஜனாதிபதிக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு TMC-ன் நிர்வாகமே காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.


