News December 31, 2024

அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த அரசியல் தலைவர்கள்

image

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலை., கல்லூரிகள், பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதை உறுதி செய்யுமாறு ஆளுநரிடம் அண்ணாமலை கேட்டுக் கொண்டார். விஜய் நேற்று ஆளுநர் ரவியை சந்தித்து மனு வழங்கியதை தொடர்ந்து, அண்ணாமலையும் நேற்று ஆளுநரை சந்தித்தார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, மாணவி வழக்கு விசாரணை முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News March 7, 2026

FLASH: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

image

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை 12.2% உயர்ந்துள்ளது. அதனால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை $90.90 ஆனது. அதன் தாக்கத்தாலேயே 10 மாதங்களுக்கு பிறகு இந்திய சந்தையில் <<19316790>>வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்<<>> விலை இன்று அதிகரித்தது. குறிப்பாக 2020 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கச்சா எண்ணெய் உச்சம் தொட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 7, 2026

விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை: அண்ணாமலை

image

மோடி தலைமையிலான 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எரிவாயு பயன்பாடு 45% அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, சமையல் எரிவாயு இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது. மொத்த பயன்பாட்டில், இறக்குமதி மட்டுமே 60% ஆக உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்படும்போது, நமது நாட்டிலும் விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

News March 7, 2026

FLASH: விஜய் மனைவி சங்கீதா வேதனை!

image

செங்கல்பட்டு கோர்ட்டில் <<19319427>>சங்கீதா தாக்கல்<<>> செய்துள்ள புதிய மனுவில் பல்வேறு தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார். 26 வருடங்கள் விஜய் உடன் குடும்பம் நடத்தி 2 குழந்தைகளை பெற்று வளர்த்துள்ளதாகவும், நல்ல குடும்ப தலைவியாக இருந்ததாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்த விஜய், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

error: Content is protected !!