News December 30, 2024
கருப்பாநதி அணை நாளை திறப்பு: கலெக்டர் தகவல்

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாளை (31.12.2024)காலை 08.30 மணி அளவில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கருப்பாநதி அணையில் தண்ணீரை மாவட்ட ஆட்சித் தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைக்க உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 15, 2026
தென்காசி: கறவை மாடு வாங்க ரூ.1,20,000 வரை கடன்

தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடுகளை வாங்க ரூ.1,20,000 வரை கடன் வழங்குகிறது. இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT
News March 15, 2026
தென்காசி: மாதம் ₹1,000 செலுத்தி, ₹5.54 லட்சம் பெறலாம்

பெண் குழந்தைகளின் எதிர்கால நிதித் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது . குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை இத்திட்டத்தின் கீழ் கணக்கை திறக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 21 ஆண்டுகள் முடிவில் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ. 5,54,206 கிடைக்கும். தொடர்புக்கு வங்கிகள் (அ ) தபால் நிலையத்தை அணுகவும்.
News March 15, 2026
தென்காசி : 108 ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய இனி Whatsapp..!

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…


