News March 25, 2024
தேர்தல் திருவிழா : வேட்பு மனு தாக்கல்

மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 4, 2025
1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <
News April 4, 2025
அரசு பள்ளி விழாக்களில் திரைப்படப் பாடலுக்கு தடை

ராணிப்பேட்டை அரசு பள்ளிகளில் ஆண்டு விழாவின் போது சாதிய வன்மத்தை தூண்டும் பாடல்கள், கட்சிக் கொடிகள், குறியீடுகள் போன்றவற்றை கொண்டு நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்றும், திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடுவதை தடைச் செய்தும் பள்ளி கல்வி துறை இயக்குனர் அதற்கான சுற்று அறிக்கையை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் சாதி ரீதியில் நடனமாடியது சர்ச்சையான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News April 4, 2025
ராணிப்பேட்டையில் பல்லவர் கால குடைவரை

திருப்பாண்மலையில் பல்லவர் கால குடைவரை ஒன்று குன்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அழகிய அம்பிகை யக்ஷியின் உருவம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சிற்பம் பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் வெட்டப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டு கூறுகின்றது. இங்கிருந்த சமண முனிவர்களுக்கு இதன் அருகிலேயே கூராம்பாடி என்ற ஊரை கொடையாக அளித்ததை இங்குள்ள மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க