News December 30, 2024
அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைக்குமா.. கோர்ட் உத்தரவு

புஷ்பா 2 படத்தின் ப்ரோமஷனுக்காக ஹைதரபாத்தில் உள்ள திரையரங்கிற்கு சென்ற அல்லு அர்ஜுனை பார்க்க சென்ற பெண், கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். இதுதொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், தனக்கு நிரந்தர ஜாமீன் கோரி அல்லு அர்ஜுன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி, தீர்ப்பை ஜன.3-க்கு ஒத்தி வைத்தது.
Similar News
News March 16, 2026
கூட்டணி குறித்து தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

80 தொகுதிகள், துணை முதல்வர் பதவி என்ற ஆஃபருடன் அதிமுக கூட்டணியில் தவெகவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாஜக, அதிமுக, சசிகலா, ராமதாஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி என்று தவெக தரப்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. மேலும், யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
News March 16, 2026
மாதம் ₹85,000.. கணவரை வாடகைக்கு விட்ட மனைவி!

10 ஆண்டு திருமணம், மகன்(8) இருக்கும் நிலையில், தாய்லாந்து பெண் ஒருவர், தன் கணவர் திருமணம் மீறிய உறவில் இருப்பதை கண்டறிந்துள்ளார். தங்களால் பிரிந்து வாழ முடியாது என காதல் ஜோடி மறுத்த போது, மனைவிக்கு நூதன யோசனை உதித்துள்ளது. கணவன் அந்த உறவில் தொடர மாதம் ₹85,000 Demand செய்துள்ளார். இந்த ஆஃபரை இருவரும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. தற்போது செய்தி வெளியாக, பலரும் ஆச்சரியத்தில் வாயை பிளந்துள்ளனர்.
News March 16, 2026
புதுச்சேரி வேட்பாளர்களை இறுதி செய்யும் விஜய்

தவெக சார்பில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, விஜய் இன்று இறுதி செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இன்று முதல் 23-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. அங்கு போட்டியிட ஆர்வமாக இருக்கும் வேட்பாளர்களிடம், விஜய் இன்னும் சற்றுநேரத்தில் நேர்காணல் நடத்துகிறார்.


