News March 25, 2024
தேர்தல் திருவிழா : வேட்பு மனு தாக்கல்

மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
பெரம்பலூரில் 1592 பேர் பங்கேற்கும் காவலர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்குரிய 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான பொது தேர்வு நாளை நவ.9ம் தேதி துறையூர் சாலையில் உள்ள தனியார் பல்கலைக்கழ வளாகத்தில் நடைபெறுகின்றது. இதில், 1592 தேர்வாளர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர் என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
பெரம்பலூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

பெரம்பலூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள்<
News November 8, 2025
பெரம்பலூர்: “Coffee With Collector” – மாணவர்களை சந்தித்த ஆட்சியர்!

அரசுப் பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும், படிப்பு விளையாட்டு பொது அறிவு, கலை உள்ளிட்ட பல்வேறு திறன்களில் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தை கொடுக்கும் வகையிலும் “Coffee With Collector” என்ற நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இமாவட்ட ஆட்சியருடன் மாணவர்கள் சந்தித்து கலந்துரையாடினர் .


