News December 30, 2024

ராகுலை ரோஸ்ட் செய்த பாஜக.. களத்தில் இறங்கிய காங்.

image

மன்மோகன் சிங்கிற்கு துக்கம் அனுசரிக்கும் வேளையில், ராகுல் காந்தி புத்தாண்டை கொண்டாட வியட்நாம் செல்ல உள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. சீக்கியர்களுக்கு எதிரான கட்சி காங். எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள காங்., யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங்கை தகனம் செய்ய மறுத்துவிட்டு இப்போது அக்கறை உள்ளது போல் பேசுவதாகவும், திசைதிருப்பும் அரசியலை பாஜக எப்போது கைவிடும் எனவும் வினவியுள்ளது.

Similar News

News March 12, 2026

தருமபுரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தருமபுரி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

3 சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. அதிரடி தீர்ப்பு

image

நெல்லை, மேலப்பாளையத்தில் 2023-ம் ஆண்டில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்த நெல்லை போக்சோ கோர்ட், 40 வயதான குற்றவாளி ஆனந்த சேகருக்கு தூக்கு தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் 3 சிறுமிகளுக்கும் தலா ₹7 லட்சத்தை இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

News March 12, 2026

ரஜினியை மிரட்டியது திமுக: ஆதவ் அர்ஜுனா

image

ரஜினி அரசியல் கட்சி தொடங்காததற்கு திமுகவே காரணம் என ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக விடுத்த மிரட்டலால் தான் ரஜினி மனவலிமை இழந்து பின்வாங்கியதாக குறிப்பிட்ட அவர், விஜய் திமுகவை எதிர்த்து நிற்கிறார் என்றால் அவருக்கு மன வலிமை அதிகம் எனவும் பேசியுள்ளார். முன்னதாக, உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என ரஜினி கூறியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!