News December 30, 2024
ஆட்சியரை சந்தித்த மாணவர்கள் – காரணம் என்ன?

மண்ணச்சநல்லூர் வட்டம் இருங்களூர் முல்லை நகர் பகுதியில் பள்ளிச் செல்லும் குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கையை முன்வைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சீருடை உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை வழங்கினர்.
Similar News
News August 13, 2025
திருச்சி எம்.எல்.ஏ இனிகோ முதல்வருக்கு கடிதம்

திருச்சி எம்எல்ஏ இனிகோ, தமிழக முதலமைச்சருக்கு இன்று கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நாடு முழுவதும் கல்லறை திருநாள் வரும் நவ-2ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நவ.1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் தகுதி தேர்வான TNTED தேர்வு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகவே கல்லறை திருநாளை முன்னிட்டு இந்த தேர்வு தேதியை மாற்றி அமைத்து தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
திருச்சி: மத்திய அரசு வேலை; EXAM கிடையாது!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News August 13, 2025
திருவெறும்பூர்: ஐடிஐ சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலி இடங்களுக்கான நேரடி சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.