News December 30, 2024
இந்த ஆண்டின் ஆட்டநாயகன் யார்?

2024ஆம் ஆண்டுக்கான ICC-யின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில், பும்ரா (71 விக்கெட்கள்) இடம்பிடித்துள்ளார். இவரைச் சேர்த்து, இந்த பட்டியலில் மொத்தம் 4 பேர் உள்ளனர். ENGன் ஜோ ரூட் (1556 ரன்கள்), SLன் கமிண்டு மெண்டிஸ் (1049 ரன்கள்), ENGன் ஹேரி ப்ரூக் (1100 ரன்கள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். உங்களுக்கு பிடித்தவருக்கு வாக்களிக்க இங்கே <
Similar News
News July 11, 2025
பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம்!

இந்தியப் பங்குச்சந்தைகள் 2-வது நாளாக இன்றும்(ஜூலை 11) சரிவைக் கண்டுள்ளன. வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 249 புள்ளிகள் சரிந்து 82,941 புள்ளிகளிலும், நிஃப்டி 67 புள்ளிகள் சரிந்து 25,288 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. குறிப்பாக TCS, Infosys, Tech Mahindra உள்ளிட்ட முக்கிய ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News July 11, 2025
வைகோ அல்ல ‘பொய்கோ’: வைகைச்செல்வன் விளாசல்

திருச்சி திமுக மாநாட்டிற்குச் செல்லாமல், போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்ததே அரசியல் வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு என <<17024276>>வைகோ<<>> பேசியிருந்தார். இந்நிலையில், மதிமுகவின் பம்பரம் சின்னத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தர உழைத்தது அதிமுக என்பதை அவர் மறந்திடக்கூடாது என வைகைச்செல்வன் கூறியுள்ளார். அவர் வைகோ அல்ல, ‘பொய்கோ’ என்றே அழைக்க வேண்டும் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
News July 11, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹440 உயர்வு

சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூலை 11) சவரனுக்கு ₹440 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் 1 கிராம் ₹9,075-க்கும், சவரன் ₹72,600-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹160 அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹121-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,21,000-க்கும் விற்பனையாகிறது.