News December 30, 2024
பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் – டிஐஜி பேட்டி

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஐஜி சத்திய சுந்தரம் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் தன்னார்வலர்கள் உட்பட 2000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.கடற்கரை சாலை உள்ளிட்ட நகரப்பகுதியில் அதிகப்படியான காவல்துறையினர் பணியில் இருப்பார்கள். கடற்கரை சாலை பத்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படும். நாளையும் நாளை மறுநாளும் கடலில் இறங்க அனுமதி இல்லை என்றார்.
Similar News
News March 10, 2026
BREAKING: புதுச்சேரியில் ஹோட்டல்கள் மூடல்

மத்திய அரசின் உத்தரவின்படி புதுச்சேரியில் ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக எரிவாயு சிலிண்டர் வினியோகம், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கேஸ் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இன்று ஹோட்டல்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. ஆனால் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் நாளை முதல் ஹோட்டல்கள் செயல்பட முடியாத நிலை உருவாகி, மூடப்படும் சூழல் ஏற்படலாம் என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
News March 10, 2026
புதுச்சேரி: இனி டாக்டர் பீஸ் FREE..!

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <
News March 10, 2026
புதுவை: என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

காரைக்கால் வடக்கு தொகுதி கீழகாசாக்குடி, காளியம்மன் கோவில் தெரு, காலனி தெரு, வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவைச் சார்ந்த இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் மற்றும் அமைச்சர் திருமுருகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.


