News December 30, 2024
இந்நேரம் கொலை செய்யப் பட்டிருப்பேன்: பாலா

சினிமாவிற்கு மட்டும் வரவில்லை என்றால் தான் கொல்லப்பட்டிருப்பேன் அல்லது இயற்கை மரணமடைந்திருப்பேன் என இயக்குநர் பாலா அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இளம் வயதில் போதைப்பழக்கத்தின் EXTREME நிலைக்குச் சென்றதாகவும், இன்னும் 1 வருடம் தான் தாங்குவான் என குடும்பத்தினர் நினைத்ததாகவும் அவர் நினைகூர்ந்துள்ளார். மேலும், சினிமா ஆர்வம் தான் தன் உயிரை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News March 22, 2026
தாக்குதல்களை நிறுத்துங்கள்.. ஈரானுக்கு 22 நாடுகள் கடிதம்

ஹார்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்கக் கோரி 22 நாடுகள் ஈரானுக்கு கடிதம் எழுதியுள்ளன. இந்தப் பட்டியலில் UAE, இங்கிலாந்து, பஹ்ரைன், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் பிற நாடுகள் அடங்கும். வளைகுடாப் பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். ஈரானின் நடவடிக்கை உலக மக்களை பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.
News March 22, 2026
அவர்களே முதலில் தாக்குதலை தொடங்கினார்கள்: ஈரான்

PM மோடியுடனான தொலைபேசியில் பேசிய ஈரான் அதிபர் பெஸ்கோவ் நாங்கள் போரை தொடங்கவில்லை என்று கூறியுள்ளார். அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை நடத்தியதாக கூறினார். அணுசக்தி நடவடிக்கைகளை தடுக்கவே இந்த தாக்குதல்கள் என்ற அமெரிக்காவின் கூற்றையும் அவர் நிராகரித்தார். இந்த போர் முடியவேண்டுமென்றால் தங்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றார்.
News March 22, 2026
கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா?

தவெக தனித்து போட்டி என விஜய் அறிவித்துள்ளார். அக்கட்சி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் என்பதால் அதன் பலம் என்னவென்று யாருக்கும் தெரியாது. கூட்டம், கணிப்புகளை வைத்து வெற்றியை தீர்மானிக்க முடியாது என அரசியல் நோக்கர்கள் மட்டுமல்ல அக்கட்சி நிர்வாகிகளே பேசி வருகின்றனர். சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்த நடிகர்கள் விஜயகாந்த், சிரஞ்சீவி ஆகியோரை முன்னுதாரணமாக கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?


