News December 30, 2024

வேதனையான சாதனை படைத்த ரோஹித் சர்மா

image

டெஸ்டில் எதிரணி கேப்டனின் பந்துவீச்சில் அதிக முறை ஆட்டம் இழந்த கேப்டன்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் இடம் பிடித்துள்ளார். நடப்பு BGT தொடரில் இதுவரை 4 முறையும், அதற்கு முன்பு 2 முறையும் என இதுவரை 6 முறை ரோஹித் சர்மாவை, ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆட்டமிழக்க செய்துள்ளார். முன்னதாக ENG கேப்டன் டெட் டெக்ஸ்டர், AUS கேப்டன் ரிச்சி பெனாடின் பந்துவீச்சில் 5 முறை ஆட்டம் இழந்துள்ளார்.

Similar News

News March 14, 2026

BREAKING: விஜய்க்கு முதலிடம்.. புதிய கருத்துக்கணிப்பு

image

லயோலா(IPDS) கருத்துக்கணிப்பில், இளைஞர்களின் நம்.1 தேர்வாக விஜய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக, விசிக, நாதக, அதிமுக, பாஜக என்ற வரிசையில் பிற கட்சிகளின் வாக்குகளை விஜய் உடைப்பார் என கூறப்பட்டுள்ளது. அடுத்த முதல்வருக்கான ரேஸில் CM ஸ்டாலினை விஜய் நெருங்கிவிட்டதாகவும், நகர்ப்புறங்களில் திமுக கூட்டணிக்கு 24.77%, தவெகவுக்கு 23.44% மக்கள் ஆதரவு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 14, 2026

வங்கி கணக்கில் ₹25,000.. அரசு அறிவிப்பு FACTCHECK

image

PM Laptop Scheme 2026 திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் (அ) ₹25,000 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. ‘CareerNotify18’ என்ற யூடியூப் சேனலில் வெளியான இந்த தகவல் பொய்யானது என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. myscheme.gov.in. இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ தகவல்களை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2026

எண்ணெய் கப்பல்களுக்கு ஈரானின் புது ரூல்ஸ்

image

டாலருக்கு பதிலாக சீன யுவானில் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ள வேண்டுமென ஈரான் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி செய்தால் மட்டுமே சில எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியே செல்வதற்கு அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது எண்ணெய் வணிகம் டாலரில் மட்டுமே நடைபெறுவதால், டாலர் சக்திவாய்ந்த கரன்சியாக உள்ளது. ஈரானின் முடிவு டாலர் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.

error: Content is protected !!