News December 30, 2024
296 ரயில்களின் எண்கள் மாற்றம்.. ஜன. 1 முதல் அமல்

கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து ரயில்களுக்கும் பூஜ்யத்தில் தொடங்கும் எண்கள் அளிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், அந்த ரயில்களுக்கு தற்போது வழக்கமான எண்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தெற்கு ரயில்வேயால் இயக்கப்படும் 296 ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. அவை 2025 ஜன. 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்ட ரயில்களின் எண்களும் மாறுகின்றன. SHARE IT.
Similar News
News August 15, 2025
இதை செய்யாமல், கூலி படத்தை CM பார்க்கிறார்: சீமான்

கூலிக்காக போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படத்தை CM ஸ்டாலின் பார்க்கிறார் என சீமான் விமர்சித்துள்ளார். சென்னையில் கைதான தூய்மை பணியாளர்களை நேரில் சென்று சந்தித்த சீமான் அதன்பின் பேட்டியளித்தார். அப்போது, மக்களை பற்றி சிந்திக்காதவர்களை தேர்வு செய்தது மக்களின் தவறு என்றார். நாட்டை தூய்மையாக வைத்திருப்பது அரசின் பொறுப்பா அல்லது தனியார் பொறுப்பா எனவும் கேள்வி எழுப்பினார்.
News August 15, 2025
இடஞ்சுழி எழுத்துகள் தெரியுமா?

ட, ய, ழ ஆகியவை இடஞ்சுழி எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை எழுதும்போது கையை இடதுபுறமாக வளைத்து (அ) சுழித்து எழுதுவதால் இடஞ்சுழி எழுத்துகளாகும். மாறாக இடதுபக்கம் இருந்து வலப்பக்கம் சுழித்து எழுதப்படுபவை வலஞ்சுழி எழுத்துகளாகும். உ-ம்: அ, எ, ஔ, ண, ஞ ஆகியவை. தமிழ் எழுத்துகளில் பெரும்பாலானவை வலஞ்சுழி எழுத்துகளாகவே உள்ளன. உ-ம்: அ, ஆ, இ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஓ, ஒள, க, ச, ஞ, ண, த, ந, ம, ல, வ, ழ,ள, ன.
News August 15, 2025
ஆக.19-ம் தேதி இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அணித் தேர்வு கூட்டம் முடிந்தபின், அஜித் அகர்கர் அணியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தேசமான அணி விவரம்: அபிஷேக், சாம்சன், சூர்யா, திலக், ஹர்திக், கில், துபே, அக்சர், சுந்தர், வருண், குல்தீப், பும்ரா, அர்ஷ்தீப், ஹர்ஷித் / பிரசித், ஜிதேஷ்/ஜுரெல் ஆகியோர். உங்கள் கணிப்பு யார் யார்?