News March 25, 2024

மக்கள் கவனத்தை திசை திருப்பவே கெஜ்ரிவால் கைது

image

தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்ப அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதாக கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியா பார்த்த ஊழல்களில், தேர்தல் பத்திர ஊழல்தான் மிகப்பெரியது. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மத்திய பாஜக அரசு கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

Similar News

News January 12, 2026

தங்க மனசுக்காரருக்கு ₹1 லட்சம் வெகுமதி

image

குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் நகைகளை போலீசிடம் ஒப்படைத்த <<18834535>>தூய்மைப் பணியாளர் பத்மாவை<<>>, CM ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததை பாராட்டி வாழ்த்திய CM ஸ்டாலின், பரிசுத்தொகையாக ₹1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். ஏழ்மையில் இருந்தாலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படாத பத்மாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

News January 12, 2026

விசா இல்லாமல் சுற்றி வர ஆசையா?

image

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நாடுகளை விசா இல்லாமல் சுற்றிப் பார்க்க ஆசையா? விசா தேவையில்லை என்பதால், பணம் மற்றும் நேரத்தை சேமிக்கலாம். டென்ஷன் இல்லாமல் பறந்து சென்று ஜாலியாக சுற்றிப்பார்க்கலாம். அந்த வகையில், என்னென்ன நாடுகளுக்கு விசா தேவையில்லை என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News January 12, 2026

OFFICIAL: ‘பராசக்தி’ வசூல் இவ்வளவு கோடியா..!

image

‘ஜன நாயகன்’ வெளியாகாததால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான SK-வின் ’பராசக்தி’ 2 நாளில் ₹51 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்த நிலையிலும், முதல் நாளில் ₹27+ கோடி, 2-வது நாளில் ₹24+ கோடி வசூல் செய்துள்ளது. பொங்கலுக்கு தொடர் விடுமுறை வருவதால், இப்படம் ₹100 கோடியை கடக்கும் என திரைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

error: Content is protected !!