News December 30, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் மாலை 4 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, கரூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 7, 2026

தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $82.45 (இந்திய மதிப்பில் ₹7,580) உயர்ந்து $5,171.92-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1.5 உயர்ந்து $84.54-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 7, 2026

தேர்தல் செலவு விவகாரத்தில் அதிமுக மா.செ.,க்கள் அப்செட்?

image

தேர்தல் நெருங்கும் நிலையில், செலவு குறித்து EPS மெளனம் காப்பதால் மா.செ.,க்கள் அப்செட் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4-ம் தேதி கட்சி ஆபிஸை தொடர்ந்து தனது வீட்டிலும் மா.செ.,-க்கள் கூட்டத்தை EPS நடத்தினார். அப்போது, பூத் கமிட்டி, வேட்பாளர் தேர்வு பற்றி மட்டுமே EPS பேசினாராம். தேர்தல் செலவு குறித்து இதுவரை பேசாமல் இருப்பதால், வேட்பாளர் தேர்விலும் சுணக்கம் நிலவுவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

News March 7, 2026

நெஞ்சு சளி விரட்டும் கசாயம்!

image

➤தேவை: கற்பூரவல்லி, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், மிளகு சீரகம், துளசி, இஞ்சி, மஞ்சள் தூள் ➤செய்முறை: மேலே குறிப்பிட்ட அனைத்தையும் (மஞ்சளை தவிர்த்து) நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு, மஞ்சள் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். இதனை இரவில் குடித்து வர நெஞ்சு சளி நீங்கும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அனைவருக்கும் இதை பகிருங்கள்.

error: Content is protected !!