News March 25, 2024
பாஜக அகற்றப்பட வேண்டிய கட்சி

பாஜக அகற்றப்பட வேண்டிய கட்சி என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என சிலர் சவால் விட்டு வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும். ஒருபோதும் பாஜக ஆட்சிக்கு வரும் நிலை ஏற்படாது. இதற்கு தமிழகத்தின் தேர்தல் முடிவு சாட்சியாக இருக்கும். தேர்தலில் பாஜகவின் அதிகார அகங்காரத்துக்கு மக்கள் தக்க தண்டனை தருவார்கள்” என்றார்.
Similar News
News January 16, 2026
திருப்பத்தூரில் ரயிலில் அடிபட்டு கொடூர பலி!

ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கமலா (85). இவர் நேற்று (ஜன.15) சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மூதாட்டி மீது மோதியதில் மூதாட்டி அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
News January 16, 2026
ELECTION: ராமதாஸ் முன் உள்ள 3 வாய்ப்புகள் இதுதான்!

NDA கூட்டணியில் அன்புமணி சேர்ந்துவிட்டதால், ராமதாஸுக்கு இன்னும் 3 வாய்ப்புகளே உள்ளன. 1.திமுக அல்லது தவெக கூட்டணியில் சேர்ந்து அன்புமணி தரப்புக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்குவது. 2. தனித்து களம் காண்பது. 3.அன்புமணியை சமாதானப்படுத்தி அதிமுக அணியில் ஒற்றை இலக்க தொகுதிகளை பெறுவது. வரும் தேர்தலில் எந்த அணி அதிக MLA-க்களை வெல்லுமோ, அந்த அணியே பாமகவை கைப்பற்றும் என கூறப்படுகிறது.
News January 16, 2026
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்

உழவுத் தொழிலில் விவசாயிகளுக்கு துணைநிற்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 2.30 மணிக்குள்ளும் பொங்கல் வைக்கலாம். மேலும், அந்த பொங்கலை மாட்டிற்கு கொடுத்து வழிபாடு செய்வது சிறப்பு. வீட்டில் மாடுகள் இல்லாதவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பகவானை வழிபடலாம்.


