News December 30, 2024
தீவிரவாதிகளில் 60% பேர் பாகிஸ்தானியர்கள்

நடப்பாண்டில் ஜம்மு & காஷ்மீர் பிராந்தியத்தில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 60% பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் அவ்வப்போது தீவிரவாதிகள் ஊடுருவும்போது, இந்திய ராணுவம் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், ரஜோரி, பூஞ்ச், கிஷ்த்வார், கதுவா மாவட்டங்களில் இந்தாண்டு மட்டும் 75 பாக்., தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
Similar News
News March 13, 2026
திண்டுக்கல் பெண்களுக்கு தேவையான எண்கள்- CLICK!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!
News March 13, 2026
அதிமுகவில் இணைந்தது ஏன்? காளியம்மாள்

அதிமுகவில் ஜனநாயக சூழல் இருப்பதாலும், எளிய குடும்பத்தின் பின்னணியை கொண்ட தமிழன் (EPS) தலைமையை ஏற்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அதிமுகவில் இணைந்ததாக காளியம்மாள் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், கட்சிப் பொறுப்பு வழங்குவது குறித்தும் தலைமை முடிவு செய்யும் எனக் கூறிய அவர், அதிமுகவில் இணைந்தது தனிப்பட்ட முடிவு அல்ல; தனது மக்களின் முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
வரட்டி தட்டி, விறகு உடைக்கலாம் வாங்க!

எங்கோ தூர தேசத்தில் நடக்கும் போர், நமது அடுப்படி வரை பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. சிலிண்டர் பற்றாக்குறையால் தவித்து போன மக்கள், ‘கண்ணாயிரம் அந்த Weapons-அ எடு’ என இத்தனை நாளாக கண்டுக்காத வரட்டியையும், விறகையும் தேடி அலைகின்றனர். இந்த நிலையில், பல இடங்களிலும் சுவற்றில் வரட்டி தட்டி வைத்திருக்கும் காட்சி மீண்டும் கண்களில் தென்பட தொடங்கியுள்ளன. அனைத்திற்கும் ஒரு காலம் வரும் என சும்மாவா சொன்னாங்க!


