News December 30, 2024

வேலை கஷ்டமா இருக்குமோ?

image

தனியார் வங்கி ஊழியர்களின் பணி விலகல், 25% அதிகரித்துள்ளதாக RBI தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை உயர்ந்து வருவதால், வங்கி சேவைகள் முடங்கி வருவதாக எச்சரித்துள்ள RBI, பணி விலகலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தனியார் வங்கிகள் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், நிதிசார்ந்த முறைகேடுகளை உன்னிப்பாக கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் விடுமுறை

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெயிட்டுள்ளார். அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக்யின் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுகூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் ஆகிய அனைத்திற்கும், சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாளை ஒருநாள் மட்டும் உலர் தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

இந்தியாவிற்கு வரியை மேலும் உயர்த்துவோம்: USA மிரட்டல்

image

டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், இந்திய பொருள்களுக்கு மேலும் வரியை அதிகரிப்போம் என அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெசண்ட் எச்சரித்துள்ளார். உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக டிரம்ப் – புடின் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முன்னதாக, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி, போரில் ரஷ்யாவிற்கு உதவுவதாக கூறி இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரிவிதித்தது.

News August 14, 2025

இணையத்தில் டிரெண்டாகும் #பாசிசக்கோமாளி_ஸ்டாலின்

image

தூய்மை பணியாளர்கள் கைது விவகாரத்தில் அரசுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், X தளத்தில் #பாசிசக்கோமாளி_ஸ்டாலின் டிரெண்டாகி வருகிறது. அதில், திமுக அரசு மற்றும் CM ஸ்டாலினுக்கு எதிராக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 16,000 பேருக்கு மேல் கருத்து பதிவிட்டு இந்திய டிரெண்டிங்கில் இடம் பிடித்த நிலையில், தற்போது திமுக ஐடி விங் தரப்பினர், அரசுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

error: Content is protected !!