News March 25, 2024
மீண்டும் ஜொலித்த சாய் சுதர்சன்

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் பெற்ற வெற்றிக்கு சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டமும் ஒரு காரணமாகும். 39 பந்துகளை எதிர்கொண்ட அவர், 45 ரன்களை குவித்தார். இது 115.38 ஸ்டிரைக் ரேட் ஆகும். சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சாய் சுதர்சன், டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஐபிஎல்லுக்குள் நுழைந்தார். தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் விளாசியுள்ளார்.
Similar News
News December 30, 2025
பொங்கல் பரிசுத்தொகை.. ஸ்வீட்டான செய்தி வந்தது

புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், விரைவில் பொங்கல் பரிசுத்தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி & சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தலா 1.77 கோடி வேட்டி & சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால், பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
News December 30, 2025
அதிமுக அடிமை கட்சி தான்: அண்ணாமலை

‘அதிமுக அடிமை கட்சி’ என CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, ‘என்னை பொறுத்தவரை அதிமுகவும் அடிமை தான், NDA கூட்டணியும் அடிமை தான். யாருக்கு அடிமை? மக்களுக்கு அடிமை’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களை எஜமானர்களாக நினைத்து, அவர்களுக்காக சேவை செய்யும் கூட்டணியை அடிமை என சொன்னால், அதை பெருமையாக நினைத்து வேலை செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
‘புதிய கல்விக்கொள்கையை TN மக்கள் ஏற்றுள்ளனர்’

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறும் காசி தமிழ் சங்க நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்தார். அப்போது பேட்டியளித்த அவர், கலாசார நிகழ்வுகளில் தமிழக ஆட்சியாளர்கள் தேவையில்லாத அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டினார். மேலும், புதிய கல்விக் கொள்கையை TN மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறிய அவர், தமிழக அரசு ஏற்காவிட்டாலும், அவர்களுக்கு இன்னும் சில நாள்களே உள்ளதாக குறிப்பிட்டார்.


