News December 30, 2024
2025ல் தாத்தா – பாட்டியாகும் 90ஸ் கிட்ஸ்: Gen – B வந்தாச்சு

தொடங்கும் 2025 இருந்து பிறப்பவர்கள் ஜெனரேஷன் பீட்டா என அழைக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் Gen Z, Gen A தலைமுறைகளின் அடுத்த தலைமுறை. அப்படி என்றால், 90ஸ் கிட்ஸ் தாத்தா – பாட்டி தலைமுறையாக மாறுகிறார்கள். 90ஸ் கிட்ஸ் எனப்படுபவர்கள் 1981 – 1996க்குள் பிறந்தவர்கள். 2k கிட்ஸ் (அ) Gen Z 1996 – 2010க்குள், Gen Alpha 2010-2024க்குள் பிறந்தவர்கள். ஒவ்வொறு 14 ஆண்டுகளுக்கும் ஒரு Generation குறிக்கப்படுகிறது.
Similar News
News March 7, 2026
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விஜய்

பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ என்ற திட்டத்தை தங்கள் ஆட்சியில் நிறைவேற்றுவோம் என விஜய் அறிவித்துள்ளார். இதில், மோதிரத்துடன் டிரஸ், சோப் உள்ளிட்டவை அடங்கிய பெட்டகமும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும், மகளிர் பாதுகாப்புக்காக வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும், பள்ளிகள், ரேஷன் கடைகளில் இலவச நாப்கின் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர் அறிவித்துள்ளார்.
News March 7, 2026
மகளிர் வங்கி கணக்கில் ₹15,000.. அதிரடியாக அறிவித்தார்

மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் இன்று வெளியிட்டுள்ளார். பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தாய்மார்களுக்கு ₹15,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், அண்ணன் சீர் திட்டத்தில் திருமணத்தின்போது பெண்களுக்கு 1 சவரன் தங்கம், பட்டு சேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அனைத்து அரசு பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயண திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் விஜய் அறிவித்துள்ளார்.
News March 7, 2026
₹2,500 மகளிர் உரிமைத் தொகை.. விஜய் தேர்தல் வாக்குறுதி

தவெக சார்பில் நடைபெற்றுவரும் மகளிர் தின நிகழ்ச்சியில், பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார். அதில், தவெக ஆட்சிக்கு வந்தால் 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உதவித் தொகை ₹2,500 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், அரசு ஊழியர்களை தவிர மற்ற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் விஜய் உறுதி அளித்துள்ளார்.


