News December 30, 2024
ஆசிய எரிபந்து போட்டி பெண்கள் பிரிவில் இந்தியா வெற்றி

ஒசூரில் ஆசிய எறிபந்து கழகம், தமிழ்நாடு எறிபந்து கழகம் இணைந்து ஆசிய அளவிலான தேசிய எறிபந்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தின. இந்தியா,இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டிகளில் 21வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் 2 அணிகளில் இருந்து தலா 32 வீரா்,வீராங்கனைகள் பங்கேற்றனா். பெண்கள் அணியில் இந்தியாவும் ஆண்கள் அணியில் இலங்கையும் வென்றது.அவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கபட்டது. வழங்கப்பட்டது.
Similar News
News August 21, 2025
இலவச இருசக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சி

கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணையின் வளாகப் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் கிராமப்புற இளைஞர்களுக்கு 30 நாள்கள் இலவச இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்குதல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர் நாளை (ஆக. 23) தேதிக்குள் அலுவலகத்திற்கு நேரில் சென்று இப்பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.
News August 21, 2025
உங்களுடன் ஸ்டாலின் கட்டுரைப் போட்டி!

2021ம் ஆண்டிற்கு பின் தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து ‘உங்களுக்கு பிடித்த திட்டம்’ என்ற தலைப்பில் ஒருப்பக்க கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றிப்பெறுபவர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசுகளை வழங்க உள்ளார். விருப்பமுள்ளவர்கள் கட்டுரைகளை செப்.20க்குள் ungaludanstalincamp@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு புகைப்படம் (அ) PDF-ஆக அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News August 21, 2025
தனியார் நிறுவன ஊழியரிடம் 7.74 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரின் கைப்பேசிக்கு வாடஸ் ஆப் மூலம் வந்த தகவலை நம்பி மர்ம நபர்கள் அளித்த தகவல் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.77 லட்சத்தை இழந்துள்ளார். இது குறித்து அவர் அளித்த தகவல் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் இருங்கள்! தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.