News December 30, 2024
அட்வான்ஸாக அமெளண்ட் கொடுத்த பள்ளிக் கல்வித்துறை

அரசுப் பள்ளிகளில் இணையதள வசதிக்கான சேவை கட்டணத்தை செலுத்த, பள்ளிக் கல்வித்துறை ₹3.26 கோடியை விடுவித்துள்ளது. மொத்தம் 6,224 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள இணையதள சேவைக்கான கட்டணத்தை 2025 செப்டம்பர் வரை செலுத்தும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை இணையதள சேவை நிறுவனங்களுக்கு செலுத்திய உடன், எமிஸ் தளத்தில் விவரங்களை பதிவேற்ற HMகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 23, 2026
5 நாள்களுக்கு போரை ஒத்திவைக்கிறேன்: டிரம்ப்

மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவருவது பற்றி ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்த 5 நாள்களுக்கு ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் & ஆற்றல் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என US ராணுவத்திற்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இன்னும் ஒரு வார காலத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என SM-ல் அவர் பதிவிட்டுள்ளார்.

பாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை

வாரத்தின் முதல்நாளே பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில், கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,836.57 புள்ளிகள் வரை சரிந்து 72,696.39 என்ற நிலையில் வர்த்தகம் நின்றது. நிஃப்டியும் 601.85 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து 22,512.65 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதனால் முதலீட்டாளர்கள் ₹14 லட்சம் கோடி வரை பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.