News December 30, 2024
அவிநாசியில் கொலை: மனைவி + 5 பேர் குண்டாஸில் கைது

அவினாசி தாமரை கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், நிதி நிறுவன அதிபர். இவரது மனைவி விஜயலட்சுமி. கடந்த 1-ந் தேதி அதிகாலை நேரம் கோவை – சேலம் ஆறு வழிச்சாலை அருகே நடை பயிற்சி சென்ற ரமேசை மர்ம கும்பல் வெட்டிக்கொன்றது. இந்த வழக்கில் அவருடைய மனைவி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் 6 பேர் மீது குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 7, 2026
திருப்பூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க
News March 7, 2026
திருப்பூரில் 2026-ல் வெற்றியை இதுதான் தீர்மானிக்குமா?

2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனைத்து அரசியில் கட்சியினரும் அவரவர் கட்சியின் தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு டிபன் பாக்ஸ், பாத்திரம், சேலை ,வேட்டி, தட்டு உள்ளிட்டவைகளை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் பரிசு பொருட்களால் அவர்களுக்கு தேர்தலில் ஆதரவு கிடைக்குமா? திருப்பூர் மக்களே உங்க கருத்து என்ன பதிவு பண்ணுங்க!
News March 7, 2026
திருப்பூரை சேர்ந்தவர் பலி!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த செந்தில்குமார், கோவை வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றபோது முதலாம் மலைப் பாதையில் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் அவரை டோலி கட்டி மீட்டு அடிவாரத்திற்குத் தூக்கி வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.


