News December 30, 2024
Monday எப்படி வாரத்தின் முதல் நாளானது?

மக்களிடம் பொதுவான வழக்கங்கள் இல்லாத போது, மத வழிபாடுகளின் அடிப்படையில் விடுமுறை தினங்கள் இருந்தது. ஞாயிற்றுகிழமை வார முதல் நாளாக இருந்தது. ஆனால், 2 நாள் விடுமுறையாக சனி, ஞாயிற்றை 1926ல் ஹாரிசன் போர்ட் கொண்டு வந்த பிறகு, அது பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகே, வாரம் என்பது திங்கள் – வெள்ளி என மாற, 1988ல் தரப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு (ISO) இதனை அதிகாரபூர்வமாக உலகெங்கும் அமல்படுத்தியது.
Similar News
News March 7, 2026
நயினார் மீது கே.பி.ராமலிங்கம் அதிருப்தி

சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பாஜகவில் உள்கட்சி மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. நேற்று மாலை தர்மபுரம் ஆதீனத்தை சந்தித்த போட்டோவை நயினார் தனது X-ல் பதிவிட்டார். அந்த பதிவுக்கு கீழ், ஆன்மிகத்தில் ஈடுபாடு தேவைதான்; அதேநேரத்தில் இயக்கத் தோழர்களின் நலனிலும் அக்கறை காட்டுவது தேர்தல் நேரத்தில் அவசியம் என பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கமெண்ட் செய்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
News March 7, 2026
கணவருக்கான தகுதிகள்.. மனம் திறந்த விஜய் பட நடிகை!

GOAT, சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை மீனாட்சி செளத்ரி, தனது வருங்கால கணவருக்கான தகுதிகள் குறித்து பேசியது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தன்னை திருமணம் செய்யும் நபருக்கு குறைந்தது 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். சமையல், துணி துவைத்தல், இஸ்திரி செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார். அதற்கு நான் ரெடி என பலரும் கமெண்ட் செய்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News March 7, 2026
உடனே 94450 30725 எண்ணுக்கு HI அனுப்புங்க

தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவையை விரைவாக பெற புதிய வாட்ஸ்அப் எண் 94450 30725-ஐ தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த எண்ணுக்கு ‘HI’ என குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். உடனே ஆம்புலன்ஸ் சேவை கிடைத்துவிடும். மேலும், மொபைல் ஜிபிஎஸ் மூலம் விபத்து நடந்த இடங்களுக்கு ஆம்புலன்ஸ் துல்லியமாக சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்க.


