News March 25, 2024

திருப்பூர்: கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

image

பொங்கலூர் அருகே பெருந்தொழுவிலிருந்து சாலையில் கிராவல் மண் கடத்தப்படுவதாக அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அனுமதியின்றி 4 யூனிட் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த கிராவல் மண் கடத்திய கோவிந்தராஜ் நாச்சிமுத்து மற்றும் செல்ல குட்டி ஆகிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று விசாரணை நடத்தினர்.

Similar News

News April 10, 2025

திருப்பூரில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு!

image

திருப்பூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை, மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News April 10, 2025

திருப்பூர்: கட்டளை மாரியம்மன் கோயில்!

image

திருப்பூர் உடுமலை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின், அடர்ந்த வனத்தின் நடுவில், புகழ்பெற்ற கட்டளை மாரியம்மன் கோயில் உள்ளது. சுயம்புவாக, பாறையில் தோன்றிய மாரியம்மன், சக்திவாய்ந்த தெய்வமாகவும், வனத்தை காக்கும் வனதேவதையாக வீற்றிருக்கிறார். அம்மனை வனங்கினால் அனைத்து துன்பங்களும் நீங்குமாம். இங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழங்கப்படும் தீர்த்தம், சகல வலிகளையும் போக்க வல்லதாம். இத SHARE பண்ணுங்க.

News April 10, 2025

நிலங்களை அளவிட செய்ய சுலபமான வழிமுறை

image

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில், வட்ட அலுவங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilamtn.gov.in/citizen விண்ணப்பிக்க புதிய வசதியை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!