News March 25, 2024

கிருஷ்ணகிரி: உலக நலனுக்காக திருவிளக்கு பூஜை

image

தமிழ்நாடு பிராமண சங்கம் ஓசூர் கிளை சார்பில் சுவா சினி பூஜை மற்றும் குத்துவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் இந்த பூஜை நடத்தப்பட்டது. மகாலட்சுமியை ஆவாஹனம் செய்து ஆரம்பித்த இந்த பூஜை கன்யா பூஜை, குத்துவிளக்கு பூஜை, சுவாசினி பூஜையுடன் இனிதே நடைபெற்றது. தாம்பிராஸ் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. ஓசூர் குகை சுவாமிகள் ஸ்ரீ சாக்தானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார்.

Similar News

News September 8, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓர் பார்வை

image

▶️ வருவாய் கோட்டங்கள்: 2 (கிருஷ்ணகிரி, ஓசூர்)
▶️ தாலுகாக்கள்: 8
▶️ வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் (ஊராட்சி ஒன்றியங்கள்): 10
▶️ வருவாய் கிராமங்கள்: 661
▶️ நகராட்சிகள்: 2 (கிருஷ்ணகிரி, ஓசூர்)
▶️ பேரூராட்சிகள்: 7

இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 8, 2025

கிருஷ்ணகிரி: நிலத் தகராறு – இருதரப்பு மோதல்

image

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள சவுக்குகோட்டை கிராமத்தில், நிலத் தகராறு தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைச் சாதிப் பிரச்சினையாக மாற்றும் முயற்சியில், விசிக ஒன்றியச் செயலாளர் புலி என்ற ராஜேஷ் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பியுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

News September 8, 2025

கிருஷ்ணகிரியில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (செப்.,7) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!