News December 30, 2024
“புத்தாண்டு நள்ளிரவில் கோவில்களை திறக்கக்கூடாது”

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். ஆகம விதிகளை மீறி நள்ளிரவு 12 மணிக்கு கோவில்களை திறந்து சிறப்பு வழிபாடு நடத்தக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், பொது இடங்களில் மது விருந்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை அரசு தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News March 18, 2026
சினிமா ஸ்டார்கள் OTT தொடர்களில் நடிக்கக்கூடாது..

சில முன்னணி நடிகர்கள், இயக்குநர்களை நம்பித்தான் தியேட்டர் பிசினஸ் இருக்கிறது. அவர்கள் OTT படங்கள், சீரிஸ்களில் நடிப்பதால்/இயக்குவதால் திரையரங்கு பிசினஸ் பாதிக்கப்படுகிறது. இதனால், முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வெப் சீரிஸ் பக்கம் செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மீறுபவர்கள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
News March 18, 2026
காமெடி நடிகரை வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ்

கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 55 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்தது. அதில் காமெடி நடிகரும், இயக்குநருமான ரமேஷ் பிஷாரடி முதல்முறையாக காங்கிரஸ் வேட்பாளராக பாலக்காடு தொகுதியில் போட்டியிடவுள்ளது கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து தான் பிறந்த மண்ணில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக, உலகிலேயே அதிக வாக்குகளைப் பெற்ற ‘கை’ சின்னத்தில் வேட்பாளராக களமிறங்குவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
News March 18, 2026
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை.. வந்தது அறிவிப்பு

நாளை (மார்ச் 19) தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பின், 20-ம் தேதி வேலை நாளாக இருக்கும். அதன்பின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 21-ம் தேதியும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை வருகிறது. அதாவது அடுத்த 4 நாள்களில் 3 நாள்கள் விடுமுறையாகும்.


