News March 25, 2024

தருமபுரி: பாமக நிறுவனர் தலைமையில் ஆலோசனை

image

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, சமூக ஊடகப் பேரவை (பாமக)மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று(மார்ச் 24) அவரது இல்லத்தில் நடைபெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில், அரசியல் களத்தில் ஊடகப் பேரவையின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று மாநிலப் பொறுப்பாளர்கள் செயல்திட்டங்களை வகுத்து கொடுத்தனர். இதில் ஏராளமான மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News October 27, 2025

தருமபுரி: உங்கள் PHONEல் இது இருப்பது கட்டாயம்!

image

1)TN alert: உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2)நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3)தமிழ் நிலம்: பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4)e-பெட்டகம்: உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5)காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவைகளை பதிவிறக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க!

News October 27, 2025

தருமபுரி: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<>இங்கு க்ளிக் <<>>பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க. 2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க 3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. 7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News October 27, 2025

தருமபுரி: வரலாற்று ஓவியம் கண்டெடுப்பு

image

பென்னாகரம் வட்டம், நாகமரை காவிரி ஆற்றுப்படுகை மணிக்காரன் கொட்டகையை அடுத்த பூதிகுண்டில், பெருங்கற்கால பாறை ஓவியங்கள் இருப்பதாக வந்த தகவலையடுத்து, பென்னாகரம் வரலாறு மைய ஒருங்கிணைப்பாளர்கள் பெருமாள் தலைமையில், அப்பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதி பாறையில், பெருங்கற்கால வெண்சாந்து ஓவியம் இருப்பது கண்டறியப்பட்டது. அது 2,500 முதல், 3,500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்டிருக்கலாம்.

error: Content is protected !!