News December 30, 2024
இருண்ட டிசம்பர்.. 236 பேர் பலி

2024 டிசம்பர் மாதத்தில் நடந்த விமான விபத்தில் மட்டும் இதுவரை 236 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் இன்று நடந்த விபத்தில் 176 பேர் மாண்டனர். அதேபோல், கடந்த 25ஆம் ஆண்டு அஜர்பைஜான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் விபத்துகுள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர். இதுதவிர, 4 உலக நாடுகளில் 19 பேர் பலியாகினர். இது விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
Similar News
News March 16, 2026
BREAKING: திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

பங்குனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் (ஏப்ரல்.01) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. முருகன், அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், திருக்கல்யாணங்கள், ஊர்வலங்கள் நடைபெறும். நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டில் கலந்துகொள்கின்றனர். பக்தர்களின் வசதிக்காகவும், விழா சிறப்பாக நடப்பதற்காகவும் மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
News March 16, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஏப்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. விடுமுறையை ஈடுசெய்ய ஒரு குறிப்பிட்ட நாளில் வேலை நாளாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கும் விரைவில் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. SHARE IT
News March 16, 2026
ரஜினியிடம் ஆதவ் மன்னிப்பு கேட்கணும்: நயினார்

திமுக மிரட்டியதாலேயே ரஜினி அரசியலுக்கு வரவில்லை எனக் கூறிய ஆதவ் அர்ஜுனாவிற்கு, நயினார் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறந்த பண்பாளரான ரஜினி குறித்து ஆதவ் பொதுவெளியில் தவறாகப் பேசியது ஏற்புடையதல்ல என்று X தளத்தில் நயினார் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ரஜினி & அவரது ரசிகர்களிடம் ஆதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


