News December 30, 2024
ரோஹித் ஓய்வு பெறலாம்: AUS முன்னாள் வீரர்

தான் தேர்வுக் குழுவில் இருந்தால் ரோஹித் ஷர்மாவிற்கு ஓய்வு அளிப்பேன் என AUS முன்னாள் வீரர் மார்க் வாஹ் தெரிவித்துள்ளார். கடந்த 14 இன்னிங்ஸில் அவரது சராசரி 11ஆகவே இருப்பதாகவும், அதனால் அடுத்த டெஸ்ட்டில் பும்ராவை கேப்டனாக நியமிப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அனைத்து சிறந்த வீரர்களுக்கு ஃபார்ம் அவுட் என்பது நடக்க கூடிய ஒன்றுதான் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 13, 2026
கேஸ் தட்டுப்பாடு என திட்டமிட்டு பரப்பப்படுகிறது: மோடி

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாக தவறான தகவல்களை சிலர் திட்டமிட்டு பரப்புவதாக PM மோடி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தகவல்களை பரப்புபவர்களின் உண்மை முகம் மக்களின் முன் அம்பலப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். போரின் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது என்றும், இதை எதிர்த்துப் போராட இந்தியா கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 13, 2026
ராசி பலன்கள் (13.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 13, 2026
9-வது வயதில் செஸ்ஸில் நம்பர் 1

தமிழகத்தைச் சேர்ந்த 9 வயது சதுரங்க சாம்பியன் தமிழமுதன், 9 வயதுக்குட்பட்ட பிரிவில் உலக நம்பர் 1 இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். மேலும், 2000 Elo ரேட்டிங் புள்ளிகளைக் கடந்த உலகின் மிக இளம் வயது வீரர் என்ற சாதனையைப் அவர் படைத்துள்ளார். தன்னுடைய 4-ம் வயதில் உறவினர்கள் மூலம் செஸ் கற்றுக்கொண்ட தமிழமுதன், தொடர் பயிற்சியால் சிறந்த செஸ் வீரராக உருவெடுத்துள்ளார்.


