News December 29, 2024
TWINSக்கு இப்படி ஒரு வேறுபாடு இருக்கா?

முகம், உடல் அமைப்பு என அனைத்திலும் ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்களுக்கு, ஒரே மாதிரி கைரேகைகள் இருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அது உண்மைதான். கருப்பையில் சிசுவின் வளர்ச்சியில் சூழல் ஏற்படுத்தும் தாக்கங்களை பொறுத்தே, அதன் கைரேகைகள் அமையுமாம். தொப்புள் கொடியின் நீளம், கருவில் உள்ள நிலை மற்றும் விரல்களின் வளர்ச்சி விகிதம் ஆகியவையே கைரேகைகளை தீர்மானிக்கின்றன.
Similar News
News August 15, 2025
அரசு நிகழ்வில் ராகுல் ஏன் பங்கேற்கவில்லை? பாஜக

சுதந்திர தின விழாவில் ராகுல் காந்தி, கார்கே பங்கேற்காததை பாஜக விமர்சித்துள்ளது. ராகுல் நலமாக இருக்கிறாரா என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், தேசிய நிகழ்வுகளுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் இதுதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. நிகழ்வில் கலந்து கொள்ளாதது பற்றி இருவரும் இன்னும் விளக்கமளிக்கவில்லை. முன்னதாக காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் ராகுல் பங்கேற்றார்.
News August 15, 2025
பொதுத்தேர்வு ரத்துக்கு இதுவே காரணம்.. அமைச்சர் விளக்கம்

11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்தது ஏன் என அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 11-ம் வகுப்பு அடித்தளமாக இருக்க வேண்டுமே தவிர, மன அழுத்தத்தை கொடுக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக கல்வி திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவித்த அவர், பள்ளிகளில் ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.
News August 15, 2025
திமுகவில் இணைகிறாரா அதிமுகவின் தம்பிதுரை?

அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான், மைத்ரேயன் என அடுத்தடுத்த அதிமுக தலைவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில் தம்பிதுரையும் திமுகவில் சேரப் போவதாக, புகழேந்தி குண்டை தூக்கி போட்டுள்ளார். மேலும், பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே தங்கமணி திமுகவில் இணைவதாக செய்தி பரவிய நிலையில், அதனை அவர் மறுத்தார்.