News December 29, 2024
RAIN ALERT: இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழை

இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூரில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கீழே பதிவிடுங்க.
Similar News
News March 20, 2026
தஞ்சாவூர்: கதண்டு கடித்து 4 பேர் காயம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்றங்கரையில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே கதண்டு தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். கோவிந்தபுரம், மணஞ்சேரி, விஸ்வநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுதாகர் (38), செல்வகுமார் (36), கோவிந்தன் (65), கண்ணன் (56) ஆகியோர் கதண்டு கடித்ததில் காயமடைந்துள்ளனர். மேலும் தற்போது அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News March 20, 2026
பெரம்பலூர்: வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.23-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் நேகா பன்சால், பெரம்பலூரில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.