News December 29, 2024
முகுந்தன் நியமனத்தில் ராமதாஸ் உறுதி

பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணியை சமாதானப்படுத்தும் முயற்சி தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது. அதன் பின்னர், முகுந்தன் தொடர்பாக எந்தக் கருத்தையும் அன்புமணி தெரிவிக்கவில்லை. தனது பேரனுக்கு கட்சியில் பதவி கொடுப்பதில் ராமதாஸ் பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது. இதனால்தான் முகுந்தன் நியமனத்தில் இதுவரை எந்த மாற்று அறிவிப்பும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
Similar News
News March 11, 2026
செங்கல்பட்டில் சிறுவன் துடிதுடித்து பலி!

வண்டலூர்: கேளம்பாக்கம் அருகே சிறுசேரி பகுதியில், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி கட்டிட வேலைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுசேரி பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அடாடத் சிக்டன் (17) வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி அடாடத் சிக்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News March 11, 2026
பலன்களை அள்ளி தரும் சுண்டைக்காய்!

➤சுண்டைக்காய் சாம்பார், காரக்குழம்பு ருசியாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் அளிக்கும். ➤வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம் போன்ற செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும் ஆற்றல் சுண்டைக்காய்க்கு உள்ளதாக அகத்தியர் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ➤இதன் வற்றல் சூரணத்தை மோரில் கலந்து பருக, குடலில் உள்ள நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT.
News March 11, 2026
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்.6-ம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தேர்வுகளை 8,82,806 மாணவ, மாணவிகள், 25,801 தனித் தேர்வர்கள், 395 சிறைவாசிகள் என மொத்தமாக 9,09,002 பேர் எழுதவுள்ளனர். தேர்வுப் பணிகளில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 5,000 பறக்கும் படையினர் ஈடுபடவுள்ளனர். ALL THE BEST STUDENTS


