News March 25, 2024
நாமக்கல்லில் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்

மோகனூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கான முதல் பயிற்சி முகாம் நேற்று காலை 9.30 முதல் மாலை 5 வரை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. உமா அவர்கள் தலைமையில் அதிகாரிகள் முகாமை பார்வையிட்டனர். இந்த முகாமில் வாக்காளர் பெயரை சரிபார்த்தல், ஓட்டு எந்திரத்தை கையாளும் விதம் போன்றவற்றை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
Similar News
News April 19, 2025
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிறப்புகள்!

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள மூலவர் சுமார் 6 அடி உயரமுள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடதுபுறம் சேலையும் அணிவிக்கப்படுகிறது. இக்கோவில் உள்ள திருச்செங்கோடு மலை ஒருபுறம் பார்க்கும் போது ஆண் போலவும், மறுபுறம் பெண் போலவும் தோற்றம் அளிக்கிறது. SHARE பண்ணுங்க!
News April 19, 2025
நாமக்கல் நகராட்சி எண்கள்

▶️நகராட்சி ஆணையர், நாமக்கல்: 7397396263
▶️நகராட்சி ஆணையர், இராசிபுரம்: 7397396258
▶️நகராட்சி ஆணையர், குமாரபாளையம்: 7397396259
▶️நகராட்சி ஆணையர், பள்ளிபாளையம்: 7397396255
▶️நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு : 7397396262
நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 19, 2025
நாமக்கல்லில் அடுத்தடுத்து மழை பெய்யும்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று(ஏப்.19) 5 மி.மீயிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 8 மி.மீ.யிலும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 4 மி.மீ.யிலும் முதல் 8மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க.