News December 29, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக நாமக்கல்லை உருவாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆட்சியர் உமா அறிவுறுத்தி உள்ளார். குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிய வந்தால் உடனடியாக சைல்டுலைன் எண்ணான 1098 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 8, 2026

நாமக்கல்: திடீர் கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் தீர்வு

image

நாமக்கல் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்க இந்த 94458 51912 எண்ணிற்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு – 94987 94987 இந்த எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 8, 2026

நாமக்கல்: பெண் பரிதாப பலி!

image

மோகனுார் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி செல்வம் (55). இவர் நேற்று முன்தினம் இரவு ஜங்களாபுரம் பிரிவு பகுதியில் இருந்து, சாலையை கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல் நோக்கி வந்த டூவீலர் செல்வம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்தவரை நாமக்கல் GH-ல் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மோகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 8, 2026

நாமக்கல் மக்களுக்கு ஓர் நற்செய்தி!

image

நாமக்கல் வழியாக வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்த சென்னை – போடி (20601/02) ரயில் இனி வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த, ரயிலை அடிக்கடி சென்னை செல்லும் நாமக்கல் ரயில் பயணிகள் முன்பதிவு செய்து பயன்படுத்தி பயன்பெறலாம். இதை, தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தவும்.

error: Content is protected !!