News December 29, 2024

யார் அந்த SIR? திமுக பாணியில் களமிறங்கிய அதிமுக

image

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் ‘யார் அந்த SIR?’ என்ற வாசகத்துடன் அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். மாணவியை மிரட்டிய ஞானசேகரன், சம்பவத்தின் போது ஒருவரிடம் செல்போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது. போலீசார் அதை மறைத்து யாரையோ காப்பாற்ற முயல்வதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. ADMK ஆட்சியின் போது திமுகவும் இதுபோல் போஸ்டர் ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 10, 2025

நயன்தாராவை மட்டும் ஏன் இப்படி பண்றீங்க தனுஷ்?

image

₹4 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட ஒரு சினிமா செட்டை, விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஷூட்டிங்கிற்கு கொடுத்துள்ளாராம் தனுஷ். அதுவும் பணம் ஏதும் வாங்காமால். முன்பு, வடசென்னை படத்திற்காக தனது போட்டி நடிகரான சிம்புவுக்கும் NOC சான்றிதழை தனுஷ் வழங்கியிருந்தார். இதுதொடர்பான தகவல் வைரலாக, ‘எங்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராகிட்ட மட்டும் ஏன் காசு கேட்குறீங்க’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News July 10, 2025

பிற்பகல் 12 மணி வரை… முக்கிய செய்திகள்

image

✪<<17015271>>கோவை <<>>குண்டுவெடிப்பு.. 28 ஆண்டுகள் கழித்து கைது
✪<<17013987>>அன்புமணி <<>>நீக்கம்.. தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
✪<<17013085>>நமீபியா <<>>நாடாளுமன்றத்தில் PM மோடி… உற்சாக வரவேற்பு
✪<<17013477>>ஈரான் <<>>திட்டம்: அதிபர் டிரம்ப் உயிருக்கு ஆபத்து?
✪<<17013201>>வெற்றியை <<>>தொடருமா இந்தியா?.. இன்று 3-வது டெஸ்ட் ✪<<17013334>>மீண்டும் <<>>புஷ்பா காம்போ.. அட்லீ படத்தில் ரஷ்மிகா

News July 10, 2025

NR காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்கு என்னாச்சு?

image

புதுச்சேரியில் ஆளும் NR காங்கிரஸ் – பாஜக கூட்டணி இடையே மோதல் வலுத்து வருகிறது. <<17004404>>CM ரங்கசாமியை<<>> சமாதானம் செய்யும் முயற்சி பயனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, இருகட்சிகளின் முக்கியத் தலைவர்களும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் கூட்டணி முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்தடுத்த திருப்பங்களால் இருகட்சி தொண்டர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

error: Content is protected !!