News December 29, 2024
அமைச்சர் செந்தில் பாலாஜி சபதம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் எனச் செந்தில் பாலாஜி பந்தயம் கட்டியுள்ளார். கோவையில் நடந்த DMK ஐடி விங் மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டச் செயலாளர்களுடன் பந்தயம் கட்டினார். அதிமுகவின் கோட்டையாகப் பார்க்கப்படும் கோவையில் தற்போது ஒரு MLA கூட திமுகவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 12, 2025
ASIA CUP: ஓமனிடம் திணறிய பாக்., பேட்ஸ்மென்கள்

ஆசிய கோப்பையில் ஓமனுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முகமது ஹாரிஸ் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் குவிக்க, மற்ற வீரர்களோ ஓமன் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்களை இழந்து பாக்., 160 ரன்கள் எடுத்தது. ஓமன் தரப்பில் ஷா பைசல், அமிர் கலீம் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
News September 12, 2025
உலகின் முதல் AI அமைச்சர்!

உலகிலேயே முதல்முறையாக AI அமைச்சரை அல்பேனிய அரசு நியமித்துள்ளது. Diella (அல்பேனிய மொழியில் சூரியன்) என பெயர் கொண்ட இந்த பெண் AI அமைச்சர், தனியாருக்கு வழங்கப்படும் அரசின் டெண்டர் விவகாரங்களை மேற்பார்வையிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையான நிர்வாக காரணங்களுக்காக Diella நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவிற்கு 27 ஆண்டுகள் + 3 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தீவிர வலதுசாரியான போல்சனரோ, கடந்த 2022 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, தற்போதைய ஆட்சியை கவிழ்த்து, அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.