News March 25, 2024
புழல் பகுதியில் இப்தார் நிகழ்ச்சி

சென்னை மாநகராட்சி, 24வது வார்டிற்குட்பட்ட புழல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி நேற்று(மார்ச் 24) நடைபெற்றது. அப்பகுதியில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் இப்தார் நிகழ்ச்சியில், 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் புழல் சேட்டு கலந்து கொண்டு துவங்கி வைத்தார். பின்னர் இஸ்லாமிய சகோதரர்கள் சார்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.
Similar News
News October 27, 2025
சென்னை: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<
News October 27, 2025
MONTHA: சென்னையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் உருவாகியுள்ள மோன்தா புயலால் சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் இருந்து 640 கி.மீ தொலைவில் உள்ள புயல் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், சென்னையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 27, 2025
சென்னையை பதம் பார்க்கும் ‘மோன்தா’

வங்கக்கடலில் மோன்தா புயல் நேற்று நள்ளிரவு உருவான நிலையில் இன்று (அக்.27) சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய துவங்கியுள்ளது. நாளை தீவிர புயலாக மாறும் மோன்தா ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பகுதியில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களே முன்னெச்சரிக்கையா இருங்க.


