News March 25, 2024

தம்பியை அடித்து கொலை- அண்ணன் கைது

image

கீழையூரை அடுத்த ஈசனூர் கட்டளை மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி(54). இவரது சகோதரரான சந்தியாகு(45). இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்த நிலையில், அந்த ஊரில் நடந்த துக்க நிகழ்வு இறுதி ஊர்வலத்தில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு சந்தியாகுவை, ஆரோக்கியசாமி மண்வெட்டி கொண்டு சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து ஆரோக்கியசாமியை போலீசார் கைது செய்தனர்

Similar News

News October 27, 2025

நாகை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க

News October 27, 2025

நாகை: சைபர் க்ரைம் – மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் <>www.cybercrime.gov.in<<>> என்ற இணையதள முகவரியில் உரிய ஆதாரங்களுடன் தெரிவித்தாலும் நாகை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

News October 27, 2025

மேலவாஞ்சூரில் போலீசார் தீவிர சோதனை

image

நாகையை அடுத்துள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடி வழியாக இருசக்கர வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் புதுவை மாநில மதுபாட்டில்கள் நாகை மாவட்டத்திற்கு கடத்தி வரப்படுகிறது. பின், பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் உத்தரவின் பேரில், மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

error: Content is protected !!