News December 29, 2024

நாகர்கோவில் சென்னை இடையே 2 ரயில்கள் இயக்க பரிந்துரை

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயிலும் சென்னை சென்ட்ரல் நாகர்கோவில் இடையே மற்றொரு சிறப்பு ரயிலும் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் – கன்னியாகுமரி ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, விருதுநகர் வழியாகவும், சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் ரயில் ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், விருதுநகர் வழியாகவும் இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2026

குமரி: ரூ.2.10 கோடி நகை மோசடி

image

வடசேரியில் உள்ள வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.2.10 கோடி வரை மோசடி செய்ததாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் ரகுவரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் இருந்த நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது சில நகைகள் போலி என தெரிய வந்தது. போலி நகைகள் என தெரிய வந்ததையடுத்து நகை மதிப்பீட்டாளர் ரகுவரன் மீது போலீசில் வங்கி மேலாளர் புகார் அளித்ததன் அடிப்படையில் ரகுவரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

News March 10, 2026

குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மார்ச்.10) செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுத் தேர்வுகள் நடைபெறும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விடுமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய (மார்ச்.14) சனிக்கிழமை வேலை நாள் ஆகும்.

News March 9, 2026

குமரி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

குமரி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <>இங்கு க்ளிக் செய்து<<>> மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

error: Content is protected !!