News December 29, 2024
கமலாபுரம்: லாரி மோதி முதியவர் பலி

கொரடாச்சேரி கமலாபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி (70). விவசாயத் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கமலாபுரம் கடைவீதியில் நடந்து சென்ற போது, அவ்வழியாக கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதமாக உயிரிழந்தார். இந்நிலையில் ஓட்டுநர் மோகனை
போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 15, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.15) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 15, 2025
திருவாரூர்: இழந்ததை மீட்டுத் தரும் கோயில்

திருவாரூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் முருகனின் சிலையை வடித்த சிற்பியின் இரு கண்களை, முத்தரச சோழன் தானமாக பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு முருகன் கண்களை வழங்கியதால் எண்கண் முருகன் என பெயர் வந்துள்ளது. இதனால் இங்கு வழிபட்டால் இழந்தவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.
News September 15, 2025
திருவாரூரில் அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்

அன்பு கரங்கள் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ தலைவர் நா.இளையராஜா, சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன், மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கினர்.